குடும்ப நல நீதிமன்றம் ஒன்றிற்கு வெளியே, விவாகரத்து விசாரணை முடிந்து வெளியே வந்த பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரை சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சி காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு முன்னதாகவே, கணவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது தாயார் பெயருக்கு மாற்றிவிட்டதால், அந்தப் பெண்ணின் ஜீவனாம்சம் (Alimony) கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீதிமன்ற வளாகத்திலேயே அனைவரின் முன்னிலையிலும் கணவரைத் தள்ளிவிட்டும், கன்னத்தில் அறைந்தும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

​இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களின் கேமராவில் சிக்கிய நிலையில், தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜீவனாம்சம் கிடைக்காத விரக்தியில் அந்தப் பெண் வன்முறையில் ஈடுபடுவதைப் பார்த்து, அங்கிருந்த மற்றவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்தனர். இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள், “உண்மையைச் சுட்டிக்காட்டினால் சிலருக்குத் தாங்க முடிவதில்லை” என்றும், “சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்துள்ளது” என்றும் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, கணவரின் சமயோசித புத்தியைக் கிண்டலாகப் பாராட்டியும், பெண்ணின் ஆத்திரத்தைக் கேலி செய்தும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.