காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த அடிதடி சண்டை தொடர்பாக சிமெண்ட் முருகன் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக, டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதியின் வாகனத்தில் அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பியோடியதாக தகவல் பரவியது. இருப்பினும், சிறிது நேரத்தில் அவராகவே காவல்துறை வாகனத்தில் மீண்டும் சிறைக்கு வந்து சேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
