தியாகி இமானுவேல் சேகரரின் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை உள்ளிட்ட விழாக்கள் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு இன்று (செப்.9) காலை முதல் இரு மாதங்கள், அதாவது நவம்பர் 8-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில், இன்று (செப்.9) முதல் 15-ஆம் தேதி வரை மற்றும் அக்டோபர் 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான நாட்களில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
