இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வேடிக்கையான காணொளி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. அதில், ஒரு நபர் 50 ரூபாய் நோட்டில் சென்ட் (வாசனைத் திரவியம்) அடிக்கிறார். முதலில் அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று புரியவில்லை. பின்னர், ஒரு பெண் அந்த 50 ரூபாய் நோட்டை எடுத்து, தான் பணம் சேமிக்கும் டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஆனால், அடுத்து வரும் காட்சி வேடிக்கையின் உச்சம். சென்ட் வாசனையை முகர்ந்தபடி வந்த அந்த நபர், கிச்சனில் உள்ள டப்பாக்களை ஒவ்வொன்றாக முகர்ந்து பார்க்கிறார். இறுதியாக, பணம் இருக்கும் டப்பாவை வாசனை மூலம் கண்டுபிடித்து, அதைத் திறந்து டப்பாவில் இருந்த மொத்த பணத்தையும் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்கிறார். 50 ரூபாய் நோட்டில் சென்ட் அடித்தது, இந்த திட்டமிட்ட செயலுக்காகவே என்பது இறுதியில் தெரிய வருகிறது. இந்த புத்திசாலித்தனமான தந்திரம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து, காணொளியை வைரலாக்கியது.