சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில், ஒரு சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னால் ஒரு லாரி திடீரென திரும்புகிறது. சிறுவன் அப்படியே சென்றிருந்தால், லாரியின் டயரில் சிக்கி பெரும் ஆபத்தில் மாட்டியிருப்பான். ஆனால், சரியான நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், சிறுவனை விரைவாகப் பிடித்து தடுத்து நிறுத்தினார். இதனால், சிறுவன் எந்த காயமும் இன்றி பத்திரமாக காப்பாற்றப்பட்டான்.
இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியான பிறகு, பலரும் அந்த நபரின் துரிதமான செயலை பாராட்டி வருகின்றனர். அவரது புத்திசாலித்தனமும், உடனடியாக செயல்பட்ட தைரியமும் சிறுவனின் உயிரைக் காப்பாற்றியது. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
