கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதிய நேரத்தில் திடீரென ஒரு தெருநாய் உள்ளே நுழைந்தது. இதைப் பார்த்து உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் பயந்து ஓடினர். நாய் சிறிது நேரம் உணவகத்திற்குள் நின்று கொண்டிருந்தது. பின்னர், அது கடையின் வாசலில் படுத்து ஓய்வெடுக்க முயற்சித்தது. இதனால் உணவகத்தில் இருந்தவர்கள் மேலும் பதற்றமடைந்தனர்.

இதைப் பார்த்த உணவக ஊழியர் ஒருவர், கையில் குச்சி எடுத்து நாயை விரட்ட முயன்றார். ஆனால், நாய் வெளியே போகாமல், ஊழியர் கையில் இருந்த குச்சியைப் பிடித்து கடித்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு, ஊழியர் தெருநாயை வெளியேற்றினார். இந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.