தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்பு வரும் 9, 10 ஆகிய நாட்களிலேயே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும், 13ஆம் தேதி திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியாகிறது.

இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கேகே நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.