இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் தினந்தோறும் இணையத்தில் பரப்பப்படுகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நாய்க்குட்டி ஒன்று பூனைக்குட்டி ஒன்றும் அமர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது தன்னை ஆசையாக பார்க்கும் பூனைக்குட்டியை அன்புடன் அருகில் வந்து நாய்க்குட்டி தடவி கொடுக்கிறது. மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் நாய்க்குட்டி பூனைக்குட்டியின் மேல் வைக்கப்படுகின்றது. நாய் குட்டியை தன் மீது வைக்கும் போது பூனை க்யூட்டாக ரியாக்ஷன் கொடுக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.