சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மோகம் எந்த அளவுக்கு ஆபத்தான எல்லைக்குச் சென்றுள்ளது என்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஆற்றில் சீறி வரும் வேகமான அலைகளுக்கு நடுவே ஒரு தந்தை தனது சிறு குழந்தையை நிற்க வைத்து, அதை வீடியோவாகப் பதிவு செய்கிறார்.
அச்சத்தில் அலைகளின் வேகத்தில் கீழே விழும் குழந்தையைத் தந்தை மீண்டும் மீண்டும் பிடித்து நிற்க வைத்து, தனது மொபைலில் படமெடுப்பதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
View this post on Instagram
“>
தந்தையின் இந்த பொறுப்பற்ற செயலைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். “சிறு தவறு கூட குழந்தையை மரணத்தின் வாய்க்குக் கொண்டு சென்றிருக்கலாம்” என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
வீடியோவில் குழந்தையின் பாதுகாப்பு குறித்த தந்தையின் அலட்சியமே மக்களின் கோபத்துக்குக் காரணமாக உள்ளது.
