பள்ளி மாணவன் ஒருவன் தனது சிறிய வயதிலேயே சமையல் கலையில் அசாதாரணத் திறமையைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, இந்த வயதில் குழந்தைகள் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் பள்ளிச் சீருடையில் காணப்படும் சிறுவன், மிகவும் திறமையாக ‘மோமோஸ்’ (Momos) எனப்படும் உணவைத் தயாரிப்பதைக் காணலாம்.

மோமோஸுக்குத் தேவையான மசாலாக்களை உள்ளே வைத்து, அது அற்புதமான வடிவத்தைக் கொடுக்கும் விதத்தைப் பார்க்கும்போது, பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற ஒரு சமையல் கலைஞரைப் போலவே அவன் செய்கிறான். வீட்டுச் சூழ்நிலை காரணமாகப் பள்ளி முடிந்து வந்தவுடன், வீட்டுப் பொறுப்பை உணர்ந்து இந்த வேலையில் ஈடுபடும் அச்சிறுவனின் உழைப்பும் திறமையும் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rajkamal Rajkamal (@kamal_raj381)

“>

இந்த வீடியோவை இதுவரை 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

“விளையாடும் வயதில் குடும்பப் பொறுப்பைச் சுமக்கிறான்” என்று சிலர் கவலை தெரிவித்தாலும், “இந்தச் சிறுவன் வளர்ந்தால் திறமையான மற்றும் பொறுப்புள்ள மனிதனாக வருவான்” என்று பலரும் பாராட்டியுள்ளனர்.