லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், லியோ படத்தில் அர்ஜுன், சஞ்ஜய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் முதல் காட்சி அக்டோபர் 19 ஆம் தேதி காலை 4 மணிக்கு கேரளாவில் தொடங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் லியோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்குகிறது. தமிழகத்தில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே விமர்சனங்கள் வெளிவந்துவிடும் என்பதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.