விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஆலியா. இவர் அதே தொடரில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஆலியா சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அடிக்கடி விதவிதமான ஆடைகள் அணிந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பதிவிடுவது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த ரில்ஸ் வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்த தளபதி பிஜிஎம் உடன் எடுத்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)