சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி (CCTV) காட்சி, பார்ப்பவர் எவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. முகமூடி அணிந்த நபர் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் ஒரு கடைக்குள் புகுந்து அங்கிருந்த உரிமையாளரைப் மிரட்டிப் பணம் மற்றும் செல்போனைப் பறிக்க முயல்கிறார். அந்தச் சமயத்தில், கடையின் கல்லாப் பெட்டி அருகே அமர்ந்து குச்சி மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தை, நடப்பதை அறியாமல் தனது மழலை மாறாத அன்பினால் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த மிட்டாயைத் திருடனுக்கு நீட்டுகிறது. ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் கொள்ளையடித்த பணம் என இருந்த அந்தத் திருடன், குழந்தையின் இந்த எதிர்பாராத அன்பைக் கண்டு ஒரு நிமிடம் நிலைகுலைந்து போகிறான்.
That’s exactly why I want a daughter. pic.twitter.com/A83WP6yuo1
— kamal Bhardwaj (@bhardwaj_k9310) February 1, 2026
அந்தப் பிஞ்சு குழந்தையின் அப்பாவித்தனமான செயல், கல் நெஞ்சையும் கரைய வைத்துவிட்டது. தான் செய்த தவறை உணர்ந்த அந்தத் திருடன், உடனடியாக உரிமையாளரிடமிருந்து பறித்த செல்போன் மற்றும் பணத்தைத் திருப்பி ஒப்படைக்கிறான். மிட்டாய் கொடுத்த அந்தக் குழந்தையை மனதார வாழ்த்திவிட்டு, எதையும் எடுத்துச் செல்லாமல் அங்கிருந்து வெளியேறுகிறான். திருடன் சென்றதும், நெகிழ்ச்சியில் உறைந்து போன தந்தை தனது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும் அந்தக் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்” என்ற வள்ளுவரின் வரிகளுக்கு இலக்கணமாக அமைந்த இந்தச் சம்பவம், மனிதநேயம் இன்னும் செத்துப் போகவில்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
