சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஒரு கேப் டிரைவர் மற்றும் பெண் பயணிக்கு இடையே ஏற்படும் வாக்குவாதம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த டிரைவர், “மேடம், உங்களுடைய லொகேஷன் இங்கேயே முடிந்துவிட்டது, இதற்கு மேல் என்னால் வர முடியாது” என்று முறைப்படி கூறுகிறார். அதற்கு அந்தப் பெண், “அப்படியானால் என்னால் பணம் கொடுக்க முடியாது, உன்னுடைய (Teri) கேப்பை நான் புக் செய்திருக்கவே கூடாது” என்று மிகவும் ஒருமையில், மரியாதைக்குறைவாகப் பேசுகிறார்.
கஷ்டப்பட்டு உழைக்கும் அந்த டிரைவர், அந்தப் பெண்ணின் பேச்சால் காயமடைந்து, “தயவுசெய்து மரியாதையாகப் பேசுங்கள். உங்களுக்குப் பணம் கொடுக்க விருப்பமில்லை என்றால் கொடுக்க வேண்டாம், இந்த 132 ரூபாயால் நான் ஒன்றும் கோடீஸ்வரன் ஆகப்போவதில்லை” என்று மனவருத்தத்துடன் பதிலளிக்கிறார்.
இந்தக் காணொளியைப் பார்க்கும் நெட்டிசன்கள் அந்தப் பெண்ணின் ஆணவமானப் போக்கைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். ஒரு உழைப்பாளியைப் பொதுவெளியில் ‘நீ, வா, போ’ என ஒருமையில் அழைப்பதும், முறையான சேவையைச் செய்த பிறகும் சிறு தொகையைக் கொடுக்க மறுப்பதும் அநாகரீகமானது எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
CAB DRIVER: Ma’am, your drop ends here, I can’t go further.
WOMAN: Then I won't pay you. I shouldn't have booked "Teri" cab 😳
DRIVER: What? Please speak politely. If you don’t want to pay then don’t pay. ₹132 won’t make me rich… pic.twitter.com/4rfa6sBpWz
— Lakshay Mehta (@lakshaymehta08) February 1, 2026
“பணம் இருக்கிற திமிரில் மனிதநேயத்தை மறந்துவிடாதீர்கள்” என்றும், அந்த டிரைவர் காட்டிய கண்ணியமான அணுகுமுறை பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 132 ரூபாய் என்பது சிலருக்குச் சிறிய தொகையாக இருக்கலாம், ஆனால் அந்த டிரைவருக்கு அது அவரது அன்றாட உழைப்பின் பலன் என்பதை அந்தப் பெண் உணரத் தவறியதுதான் இங்கே சோகம்.
