சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் அமையப்பட இருக்கிறது. அந்த வகையில் தற்போது மதுரையில் மெட்ரோ ரயில் சேவை வர இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள நிலையில் 3 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதன்பிறகு 120 நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையானது வரவிருக்கிறது. இந்த வழித்தடத்தில் 20 ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் மதுரை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.