தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி உடன் தமிழக அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது.

இந்த ஒப்பந்தமானது 3,111 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையிலும், ரூ.7,614 கோடி முதலீட்டில் நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் ரூ.50,000 கோடி முதலீட்டை இலக்காக வைத்து முதல்வர் ஸ்டாலின் புதிய மின்வாகன கொள்கையை அறிவித்திருந்தார்.