தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனக்கு முதலில் வைத்த பெயர் ஸ்டாலின் அல்ல என கூறியுள்ளார்.
அதில் பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் உள்ளவர்கள் வெவ்வேறு துறைகளை சார்ந்து இருந்தாலும் அனைவரும் அண்ணாதுரை சேர்ந்தவர்கள் என கலைஞர் சொன்னார். கலைஞர் எனக்கு முதலில் அய்யாதுரை என்றுதான் பெயர் வைக்க நினைத்தார். எனவே அமைச்சர்கள் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும் அனைவரும் இந்த அய்யாதுரை அங்கம் தான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.