சிறு குழந்தைகள் உணவை உண்ண மறுக்கும்போது, அவர்களைச் சமாதானப்படுத்தப் பெற்றோர்கள் போன் அல்லது டிவியைப் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் ஒரு எருமை மாடு செய்யும் விசித்திரமான செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த எருமை மாடு தனக்கு முன் டிவி ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே பால் தருகிறதாம். இது குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பால் கறக்கும் பெண், எருமை மாடு பால் தர மறுக்கும்போது அதன் முன் டிவி-யை ஆன் செய்கிறார். டிவி-யைப் பார்த்ததும் எருமை மாடு தன் கவனத்தை முழுமையாக அதன் பக்கம் திருப்ப, பால் கறப்பது எளிதாகிறது.

இந்த வீடியோவை ‘ghantaa’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்த விசித்திரமான காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த எருமைக்கு இருக்கும் நக்கலைப் பாருங்கள்”, “வீட்டில் இருக்கும் குட்டி குழந்தைகளைப் போலவே இதுவும் டிராமா செய்கிறது” என வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

“>

இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு, எருமை மாட்டின் இந்த தனித்துவமான பழக்கம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குழந்தைகளைப் போல அடம் பிடிக்கும் இந்த எருமை மாட்டின் செயல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.