வங்கக்கடலில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பிரம்மாண்டமான பேனா சின்னத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பேனாச்சின்னம் அமைக்கப்படுமா? இல்லையா? என்பது கேள்வியாக மாறி உள்ளது. இந்த நிலையில் சேலம் திமுக கவுன்சிலர் ஒருவர் வீடுவீடாக பேனாவை கொடுத்து வருகிறார். இதற்கு காரணம் வேறுவாக இருந்தாலும் கலைஞருடைய பேனாவை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்றால், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான இயற்கை சூழலை அளிக்கவும் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக நம்முடைய குப்பைகளை நாமே முறைப்படி தரம் பிரித்து அகற்ற வேண்டும். அந்த வகையில் சேலம் மாநகராட்சிய தூய்மை நகரமாக மாற்றும் முயற்சியாக பேனா ஒன்றையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் திமுக கவுன்சிலர் பொதுமக்களுக்கு வழங்கினார். அதுமட்டுமின்றி சுமார் 5000 மேற்பட்ட வீடுகளுக்கு பேனாவை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். இவருடைய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.