கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமியை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த வாலிபர்கள் சிறுமியை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து தனது வீட்டுக்கு திரும்பி அந்தச் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது ஆஷிக் மற்றும் ஜெயராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.