பஞ்சாப் மாநிலம் ரோபாரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT Ropar) சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவனும், அவரது பேராசிரியரும் கலக்கல் காட்சியொன்றை வழங்கினர்.
மேடையில் பட்டம் பெற்றுக் கொள்ள சென்ற மாணவன் கார்த்திக், புகைப்படம் எடுக்கும் தருணத்தில் “சார், நான் sunglasses போட்டு photo எடுக்கலாமா?” என ஆசையாகக் கேட்டார். அதற்கு பேராசிரியர் பெரிதாக யோசிக்காமல், அனுமதி அளித்தார். மாணவன் தனது ‘காலா சஷ்மா’யை அணிந்து மீண்டும் நின்றார்.
View this post on Instagram
அதை தொடர்ந்து, மாணவன் தன்னிடம் வைத்திருந்த இன்னொரு கண்ணாடியை பேராசிரியருக்கும் கொடுத்து, இருவரும் sunglasses-இல் இணைந்து ஸ்டைலாக ஒரு புகைப்படம் எடுத்தனர்.
மேடையை சுற்றியிருந்த மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் உற்சாகமாக சிரித்தும், கைதட்டலும் அந்த தருணத்தை ஆரவாரமாக வரவேற்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ‘கூலஸ்ட் கான்வொக்கேஷன் மோமென்ட்’ என ரசிகர்களால் போற்றப்படுகிறது.
இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு ‘Not just degrees, but memories with a touch of swag!’ என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டது. நெட்டிசன்கள் பேராசிரியரின் நடுத்தரமான நடத்தை, மாணவனின் மரியாதையை பாராட்டி பதிலளித்துள்ளனர். “Coolest prof ever”, “Prof passed the vibe check” போன்ற கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவம், கல்வி நிலையங்களில் உள்ள மனநலம், நட்புறவு மற்றும் சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது.
