தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி புது காலணியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றனர்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.