சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு மீனவர்களான கனகராஜ்(50), ஜெயபால்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலையில் கனகராஜ் குடிபோதையில் இருந்தபோது ஜெயபாலின் மனைவி ஜெயந்தி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது கனகராஜ் ஜெயந்தியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனை அறிந்த ஜெயபால் கனகராஜிடம் ஏன் எனது மனைவியை தவறாக பேசினாய்? என தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஜெயபால் இரும்பு கம்பியால் கனகராஜை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கனகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயபால கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.