திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தீமிதி விழாவுல செம சீன்…! திருடனுக்கே ஷாக் கொடுத்த பூசாரி மனைவி … சாமியாடியதால் தூக்குன இடத்துலேயே சிக்கிய 10 சவரன்…!
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
Read more“உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்வ?”… பழ வியாபாரியின் வக்கிரம்.. கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்..!!
ஈரோடு அருகே உள்ள சோலார் நகரைச் சேர்ந்தவர் சேட்டு தனபால், இவர் தனது மனைவி புஷ்பாவுடன் இணைந்து தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், தனது தந்தை ஆறுமுகத்திற்கும், மனைவி புஷ்பாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகச்…
Read more