கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புது கிராமத்தில் மரிய வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சோபா திடீரென தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சோபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொந்தரவால் சோபா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.