இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகச் சமூக வலைதள வீடியோக்கள் மாறிவிட்டன. அந்த வகையில், தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு ஜிம் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்லில் வாலிபர் ஒருவர் தீவிரமாக ‘எக்சர்சைஸ் வீல்’ கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது தற்செயலாக அங்கு வரும் மற்றொரு நபர், பயிற்சியில் இருந்தவரின் கால்களில் மோத, அவர் நிலைதடுமாறி கீழே விழுகிறார். சண்டையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட அந்தச் சம்பவத்தில், கீழே விழுந்த வாலிபர் அமைதியாக எழுந்து மீண்டும் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். ஆனால், நிஜமான ‘ட்விஸ்ட்’ அதன்பிறகு தான் அரங்கேறியது.
Bro took revenge like it is personal 😭 pic.twitter.com/siJSKT2z1n
— Vishal (@VishalMalvi_) April 22, 2026
தன்னை இடித்த நபர் பயிற்சி செய்யத் தயாரானபோது, மின்னல் வேகத்தில் வந்த அந்த வாலிபர், இடித்தவரின் கால்களை அப்படியே தூக்கிப் பிடித்தார். கையில் இருந்த வீல்-ஐ தரையில் வைத்து, அவரை ஒரு வண்டி போல ஜிம்லை விட்டு வெளியே தள்ளிக்கொண்டு போனார்.
அங்கிருந்து நேராக சாலைக்கே தள்ளிக்கொண்டு சென்ற அந்தக் காட்சி, ஒரு நகைச்சுவை படத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. @VishalMalvi_ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வசனமே இல்லாவிட்டாலும் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வைரலாகி வருகிறது.
