யூடியூபர் அர்மான் மாலிக்கின் தன் 3-வது மனைவியை தனது இரு கர்ப்பிணி மனைவிகளுக்கு அறிமுகப்படுத்தும் வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

யூடியூபர் அர்மான் மாலிக் தன் வீடியோக்கள் மற்றும் அவரது இரண்டு மனைவிகளால் பிரபலமானார். பயல் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் ஆகிய இரண்டு மனைவிகள் அவருக்கு இருக்கின்றனர். சமீபத்தில் தன் இரண்டு மனைவிகளின் புகைப்படங்களை அர்மான் சமூகவலைதளங்களில் பகிர்ந்தார். அதில் அவரது இரண்டு மனைவிகளும் கர்பமாக இருந்தனர். இந்நிலையில் அவரது மற்றொரு வீடியோ வைரலாகி உள்ளது.

அதில், அர்மானும் அவரது 3வது மனைவியும் திருமண மாலைகளுடன் வீட்டிற்கு சென்று உள்ளனர். அர்மான் மாலிக்கின் 3வது மனைவியின் பெயர் லக்ஷ்யா. கர்ப்பிணி மனைவிகள் இருவருக்கும் தன் 3-வது மனைவியை அறிமுகம் செய்து வைக்கிறார் அர்மான். அப்போது பார்த்ததும் பயல் மற்றும் கிருத்திகா கோபமடைந்தனர். அப்போது அர்மான் மாலிக் அவர்களிடம் இது ஒரு பிராங்க் என்று கூறினார். எனினும் அவரது இரண்டு மனைவிகளும் அதை நம்பவில்லை. இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.