நடப்பு வருடத்துக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வகையான அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த அடிப்படையில் பெண்களுக்காக புது சிறு சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார். அந்த வகையில் வரும் 2025 ஆம் வருடம் மார்ச் வரை மகிளா சமன் சேமிப்புத் திட்டம் (Mahila Samman Savings Certificate) தொடங்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூபாய். 2 லட்சம் வரை பெண்கள் முதலீடு செய்துக்கொள்ளலாம். அதோடு மற்ற சேமிப்பு திட்டங்களை விட இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு வரி விலக்கு பலனும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நீங்கள் பகுதியளவு முதலீட்டை திரும்பப் பெறுவதற்கான வசதியும் இருக்கிறது.