திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துத்துவா என்பது ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் செயல் திட்டங்களும் ஒரு நீண்ட நெடிய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உத்தியாகும். அதிலே ஒன்றுதான் பொது சிவில் சட்டம்.

மணிப்பூரிலே மத நல்லிணக்கம் இருந்தது. இவர்கள் போய் அடி எடுத்து வைத்தார்கள். இந்துக்கள் – கிறிஸ்டியன் என்று அங்கே மோதல். வட இந்திய மாநிலங்களில் இந்துக்கள் – இஸ்லாமியர்கள், இந்துக்கள் –  கிறிஸ்தவர்கள் என்று மோதல்.  இந்தியர்களை இந்துக்கள் என்றும்,  இந்தியர் அல்லாதவரை  இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும் பிரித்து…  இந்துக்களை உயர்ந்த சாதி – தாழ்ந்த சாதி என்று பிரித்து,  சமூகப் பிளவினை வாதம் அதுதான் இந்துத்துவா.

சாதியை கூட நீ இந்து என்ற ஒரே பெயரில் ஒன்றாகி விடக்கூடாது. அதிலே நீ உயர்ந்த சாதி,  தாழ்ந்த சாதி என்கிற இந்த அடுக்கு முறையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எல்லா சாதி சங்கங்களையும் ஊக்கப்படுத்துகிற செயல்திட்டம் ஆர்.எஸ்.எஸ்-இன் செயல்திட்டம்.

நீ ஏதாவது ஒரு சாதி சங்கத்தை உருவாக்கி,  அமித் ஷாவை  கூப்பிட்டால்  வருவார்.  நீ நாளைக்கு ஒரு சங்கத்தை…  முதலியார் சங்கம் என்று உருவாக்கி,  அந்த சங்கத்தின் நிகழ்ச்சிக்கு நீங்கள் வாருங்கள் என்று அமித்ஷாவை கூப்பிட்டால் ஓடோடி வருவார். ஏனென்றால் சாதி உணர்வை வளர்ப்பது  செயல் திட்டங்களில் ஒன்று என விமர்சித்தார்.