செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் மதிக்கும்படியா நீங்க நடந்துக்கணும்.. நீங்கள் நடந்துக்கிறத வச்சு தான்…  மதிப்பு வரும், மரியாதை வரும். நீங்க அப்படி ஒரு இடத்துல கூட  நடந்துக்கலையே… எதையாவது ஒன்ன உருப்படியா பேசி இருக்கீங்களா….  .பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்து இருக்கிற சனாதன கோட்பாடுக்கு உச்ச நட்சத்திரமே  வள்ளலார்னு பேசுறீங்க.

இது சராசரி மனநிலையில இருக்கிற ஒருத்தர் பேசற போச்சா ?.. பத்தாயிரம் ஆண்டுக்கு முன்னாடி இந்த நிலப்பரப்பு இருந்ததா ?…  இங்க  இந்தியான்னு  ஒரு   நாடு இருந்ததா ? … அப்ப சனாதனம் இருந்ததா…புரட்சி  அண்ணல் அம்பேத்கர் சொல்லுறாரு… 3000 ஆண்டுகளா தான் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கிற இந்த வர்ணாசர்ம தர்ம கோட்பாடு இந்தியாகுள்ளே இருக்கு. அதுவும் ஆரியர்கள் வருகைக்கு பிறகு என சொல்லுறாரு.

இப்ப 3000  ஆண்டாதான் தான் இருக்கு. நீங்க ஏன் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்னாடி போறீங்க. எங்க  மூதாதை வள்ளலார் இந்த சனாதான கோட்பாட்டுக்கு எதிரா தான்,  சுத்த சன்மார்க்கம் என்கின்ற கோட்பாட்டை  உருவாக்குறாரு. நீங்க அவரை இதுக்குள்ள கொண்டு வந்து பேசினா… நாங்க என்னவா  நினைக்கிறது.  சரி ,ரொம்ப முத்திருச்சி … இத பொய் எந்த வைத்தினாலும்பண்ணாலும் சரி பண்ண முடியாது அப்படினு நாங்க விட்டு போயிருவோம்.

அப்போ எப்படி மரியாதையை வரும். மரியாதை வர மாதிரி ஒன்னு… பட்டமளிப்பு விழாக்கு அங்க போகும் போது கருப்பு சட்டை போடா கூடாதுனு  சொன்னா கோவம் வருமா ? வராதா? சட்டை கழட்டுனாலும் நான்  கருப்பாதான் இருப்பேன் என்ன பண்ணுவீங்க. கருப்பா இருந்தா உள்ள வராத சொல்லுவீங்களா ? என்னது இது . ஐயப்பன் கோவில் போறவன் எல்லாம் கருப்பு வேஷ்டி கட்டாத, கருப்பு சட்ட போடாத என சொல்லுவீங்களா ?  ஆளுநர் வேலைய பாக்கணும்ல…   மதிக்கிற மாதிரி நீ நடந்துக்கணும், அப்போதா மதிப்பு வரும் என தெரிவித்தார்.