காங்கிரஸ் கட்சி குறித்து திமுக எம்.எல்.ஏ தளபதி விமர்சனம் செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ தளபதி மதுரையில் இருக்கிறார், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியைப் பொதுவெளியில் தொடர்ந்து அவமதிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும், கூட்டணியின் கண்ணியம் கருதியே அமைதி காப்பதாகவும் அவர் எச்சரிக்கும் தொனியில் பதிவிட்டுள்ளார்.