அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜனவரி 26) தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக-வால் மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், இந்த இயக்கத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு நல்லாட்சி அமைய நாம் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்த தினகரன், ஓபிஎஸ் நிச்சயம் நல்லதொரு முடிவை எடுப்பார் எனத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.