தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்து அளித்தார். இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்காத நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த விருந்தின் போது, தேமுதிக-வின் முக்கிய முகமான எல்.கே.சுதீஷ் மற்றும் பாஜக-வின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சமீபகாலமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், பாஜக தலைவருடன் சுதீஷ் நடத்திய இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக – தேமுதிக இடையே புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா? அல்லது ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

இருப்பினும், இந்த ‘டீ பார்ட்டி’ சந்திப்பு அதிமுக தலைமைக்குச் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.