திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றியத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குஜராத்தில் அமர்ந்து கொண்டுத் திமுக-வைப் பணிய வைக்க முடியாது என்று ஆவேசமாகப் பேசினார். தனது உரையின் போது, “தமிழ்நாட்டைச் சங்கிகள் கூட்டம் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்தக் கூட்டம் வெறும் கூட்டம் அல்ல என்றும், “எதிரிகளின் கணக்கைச் சுக்குநூறாக்கும் கட்டுக்கோப்பான கூட்டம்” என்றும் அவர் இளைஞரணியினரைப் பாராட்டினார்.  இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.