தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 1950 ஜனவரி 26 இந்த நாடு குடியரசு என்ற அறிவிக்கப்பட்டு,  இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை நாம் அறிவோம். 1949 நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்டம் அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அதைக் கொண்டு போய் ஒப்படைத்தார்.

அந்த காலகட்டத்திலேயே இந்த ”கான்ஸ்டிடியூஷன்” இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொன்ன ஒரு அமைப்பு ஆர்.எஸ்எஸ். இந்தியாவின் தேசிய கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இதிலிருந்து தான் நாம் அவர்கள் யார் என  அறிந்து கொள்ள வேண்டும்,  புரிந்து கொள்ள வேண்டும்.

நாடே கொண்டாடுகிறது… நமக்கென்று ஒரு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி விட்டது. ஆங்கிலேயரை விரட்டி விட்டோம்.  இனி நாமே ஒரு அரசை உருவாக்க போகிறோம். இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்புரை.. புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அந்த முகப்புரை…. 10 வரிகள் கொண்ட முகப்புரை அதுதான், ஒரு புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காக கொள்கை அறிக்கை என்று பிரகடனம் ஆகிறது.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC. இந்தியாவிலே நாங்கள் இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானம் செய்திருக்கிறோம். நாங்கள் ஒரு அரசை கட்டமைக்க போகிறோம். அந்த அரசு குடியரசு. அந்த அரசு ஜனநாயக குடியரசு. அந்த அரசு இறையாண்மை உள்ள ஜனநாயக குடியரசு. அப்படி ஒரு அரசை உருவாக்க போகிறோம். எதற்காக ? இந்த நாட்டின் குடிமக்கள்… இன்றைக்கு இருக்கின்ற குடிமக்கள்… இனி பிறக்க போகின்ற குடிமக்கள்…

இனி காலம் காலமாக….   தலைமுறை… தலைமுறையாக பிறக்கப் போகின்ற புதிய இளைய தலைமுறையினர் அனைவருக்குமான ஒரு அரசை இங்கே உருவாக்கப் போகிறோம். அந்த அரசு இந்த நாட்டு குடிமக்களுக்கு ஜஸ்டிஸ் ( நீதியை ) உறுதிப்படுத்தும். அது மூன்று வகையான நீதி.  சோசியல் ஜஸ்டிஸ், எக்கனாமிக் ஜஸ்டிஸ், பொலிடிக்கல் ஜஸ்டிஸ். அரசியல் நீதி, சமூக நீதி, பொருளாதார நீதி.  இதை இந்த அரசு உறுதிப்படுத்தும். எந்த அரசு ? இந்த நாட்டில் இருந்து நாங்கள் உருவாக்கப் போகின்ற அரசு.

இறையாண்மை உள்ள ஜனநாயக குடியரசு. இது அவர்களுக்கான எதிர்காலத்தில் வரவிருக்கின்ற இந்திய குடிமக்கள் அனைவருக்குமான சமூக நீதியை… பொருளாதார நீதியை… அரசியல் நீதியை… உறுதிப்படுத்தும். LIBERTY, EQUALITY and FRATERNITY சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். Thoughts, Expression, Belief , Faith எதனுடைய சுதந்திரம் ?  ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரம்… சிந்திப்பதற்கு சுதந்திரம்… கருத்தை வெளியிடுவதற்கு சுதந்திரம்… கடவுளை நம்புவதற்கு சுதந்திரம்…. ஒரு அமைப்பின் மீது நம்பிக்கை வைப்பதற்கு சுதந்திரம்…. Belief சிவபெருமான் என்னை காப்பாற்றுவார் என்பது Belief. திருவடிக்குடில் சுவாமிகள் எனக்கு துணை நிற்பார் என்பது Faith. ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு.

Belief-க்கும் Faith-க்கும். நான் சிவன் மீது வைக்கிற நம்பிக்கைக்கு பெயர் Belief நான் திருவடிகுடில் சுவாமிகள் மீது வைக்கின்ற நம்பிக்கைக்கு பெயர் Faith அவர் என்னை காப்பாற்றுவார் துணை நிற்பார் எனக்கு ஆதரவு தெரிவிப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை அது Faith.  அது ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு கடவுளை நம்பலாம், ஒரு மதத்தை நம்பலாம்,  ஒரு வழிபாட்டை தேர்வு செய்யலாம். அது அவனுக்கான சுதந்திரம். உன் நேசன் ஒன் கல்ச்சர் என்று சொல்லக்கூடாது சுதந்திரத்தை பெற்று….  லிபர்ட்டி என்கிற அரசியலமைப்பு சட்டக் கூறுகள் குறித்து,

அம்பேத்கர் எழுதுகின்ற அந்த  முகப்புரையிலே சொல்லுகிறார்….. ஒவ்வொரு குடிமகனுக்குமான லிபர்ட்டி, ஈகுவாலிட்டி, ஸ்டேட்டஸ் அண்ட் ஆப்பர்சூனிட்டி. ஒருவருக்குமான தகுதியை.. வாய்ப்பை… தருவதில் சமத்துவம் இங்கே நிலவும். இரண்டு விஷயம் ஸ்டேட்டஸ். அண்ட் ஆப்பர்சூனிட்டி. வாய்ப்பை வழங்கும் போது ஒரு சமத்துவமான நிலை இருக்க வேண்டும். சமணற்ற சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்க முடியாது என்கிற போது இடையே தற்காலிகமான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

அதற்கான ஒரு யுக்தி தான் சோசியல் ஜஸ்டிஸ், ரிசர்வேஷன் அண்ட் எஜுகேஷன் அண்ட் எம்ப்ளாய்மெண்ட். பல தலைமுறைகளாக படித்தவன் பிள்ளையும்,  முதல் தலைமுறையாக பள்ளியில் அடி எடுத்து வைக்கக்கூடியவன் பிள்ளையும் சமமான வாய்பளிக்கிறோம் என்ற பெயரால் அழிக்கக்கூடாது. அவர்களை categorized செய்து.. தனித்தனியாக வகைப்படுத்தி… அவர்களுக்கிடையே காம்பெடிஷனை நீங்கள் உருவாக்கலாம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே போட்டுகள் வைக்கலாம். மாற்றுத்திறனாளிகளும் – நன்றாக ஆரோக்கியமாக உள்ளவர்களும் ஒன்றாக.. ஒரே களத்தில்.. சமத்துவமாக போட்டிக்கு வாய்ப்பை தரக்கூடாது. ஆக இப்படிப்பட்ட இந்த அரசியல் கூறுகள் Liberty, Equality, and Fraternity.  ஆங்கிலத்தில் Fraternity என்பதை நாம்  சகோதரத்துவம் என்று சொல்லுவோம். சகோதரத்துவம் என்றால் ?  Brotherhood and Sisterhood  என்கிற வெறும் அண்ணன் – தம்பி,  அக்கா –  தங்கை உறவு மட்டும் குறிப்பதல்ல.

அது சோசியல் ஹார்மோனி என்கிற சமூக நல்லிணக்கத்தை குறிப்பது. இதை மாமா என்றும் சொல்லலாம். மச்சான் என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு Smooth social harmonious relationship அதுதான் Fraternity.  அப்படிப்பட்ட இந்த சகோதரத்துவத்தை நாங்கள் உருவாக்க போகின்ற அரசு உருவாக்கித் தரும்,  உறுதிப்படுத்தும்.

தோழர்களே அதில் ரொம்ப முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது.  இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த போது,  இந்த அரசு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று விளக்கப்படுத்துகிற புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்,  மூன்று சொற்களால் அரசை விளக்கம் செய்கிறார். sovereign,  democratic,  republic ( இறையாண்மை, ஜனநாயகம், குடியரசு )

அவ்வளவுதான். ஆனால் 1975 – 76 காலகட்டத்தில் Maintenance of Internal Security Act (MISA) என்கிற மிசா சட்டத்தை கொண்டு வந்த இந்திராகாந்தி அம்மையார்,  பல்வேறு நெருக்கடிகளை அரசியல் களத்தில் அவர் ஏற்படுத்தினாலும் கூட…  அவர் செய்த மிக முக்கியமான ஒரு நல்ல அம்சம் எது என்றால் ? இந்த அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து,இந்த அரசை விளக்கம் செய்கின்ற இடத்தில் ஒரு இரண்டு சொற்களை இணைத்தார்.

அந்த இரண்டு சொற்களை இணைத்த பிறகு, இந்த அரசு என்னவாக மாறுகின்றது என்றால் ?  sovereign, socialist, secular, democratic republic. sovereign ஏற்கனவே இருந்தது. democratic republic. ஏற்கனவே இருந்தது socialist இடையிலே இந்திரா காந்தி அம்மையார் திருத்தம் செய்து இணைத்தது. secular இந்திரா காந்தி அம்மையார் மிசா காலத்திலே இணைத்த சொல்.

இது இரண்டும் அம்பேத்கர் எழுதிய காலத்தில் இல்லை என்றாலும் கூட,  இந்த இரண்டும் இம்பிளைட்.  இந்த அரசமைப்பு சட்டத்தில் இம்பிளைட் ஆகிறது. இம்பிளைட் என்றால் ? உள்ளூர உணரக்கூடியதாக இருந்தது. என்ன உள்ளூர உணரக்கூடியது என்றால் ? இந்த அரசு மதசார்பற்ற அரசு என பேசி முடித்தார்.