என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவை கொடுத்த போது, இந்தியாவிலேயே இரண்டு பேருக்கு தான் வாய் பூட்டு சட்டம் போட்டார்கள். பேச கூடாது என இரண்டு பேரை தான் ஆங்கிலேயர் அரசு சொல்லியது. ஓன்று நம்முடைய தெய்வ திருமகனார் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள்… இன்னொருத்தர் நம்முடைய பால கங்காதர திலக்… இந்த இரண்டு பேருக்கும் தான் இந்தியாவில் இரண்டு பேருக்கு தான் வாய் பூட்டு சட்டம் போடப்பட்டது.

குறிப்பாக இந்த மண்ணிலே….  நான் பேசும் பொழுது கொஞ்சம்  உணர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். நான் வழக்கமாக பேசுகின்ற பேச்சு இது இல்லை.  காரணம்… பெருங்காமநல்லூருடைய வீரத்தைப் பற்றி பேசாமல் இங்கிருந்து போக முடியாது. அந்த கொடூரத்தை பற்றி இந்த மேடையிலே நான் பேசுவது மூலமாக தமிழகத்தில் வேறு வேறு பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு பிரமலைக் கள்ளர் உடைய வீரத்தை பற்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக உசிலம்பட்டிக்கு வந்திருக்கிறேன்.

அந்தப் பெருங்காமநல்லூர் என்பது ரத்தத்தால் குளித்த பூமி அது. 1920 ஏப்ரல் 3ஆம் தேதி ஆங்கிலேயர்களால் 16 பேர் சுடப்பட்டார்கள். சுட்ட பிறகு 16 பேரை மாட்டு வண்டியில் போட்டு இங்கிருந்து எடுத்துட்டு போய் திருமங்கலம் பக்கத்தில் ஒரே புதைகுழியில் 16 பேர் புதைத்தார்கள் ஆங்கிலேயர்கள்… ஆனால் இந்த நிகழ்வு நடக்கும் பொழுது ஆங்கிலேயர்கள் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது… அங்கு ஏகப்பட்ட நம்முடைய மக்கள் அங்கே சேர்ந்திருந்தார்கள்.

அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த ஒரே ஒரு குற்றத்திற்காக மாயக்கா என்கிற பெண்மணியை ஆங்கிலேய காவல்துறை துப்பாக்கி முனையில்  இருக்கக்கூடிய கத்தியால் கிழித்து கொன்றார்கள். 16 பேர் அன்று உயிரை கொடுத்தார்கள். எப்போதுமே  தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் நாம் மறந்து விடக்கூடாது.