தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை காஜல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு நீல் என்ற அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகை காஜல் சிறுவயதில் க்யூட்டாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.