விஜய் குறித்து நடிகர் சாம் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது.

அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் ஷாம் விஜயின் நட்பு குறித்து கூறியுள்ளதாவது, குஷி திரைப்படத்தில் நடித்த பிறகு இப்போது தான் அவருடன் இணைந்து நடிக்கிறேன். நான் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன். இன்று அவர்கள் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார்கள். ஆனால் விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்த பணிவும் அன்பும் யாரிடமும் கிடையாது. நிறைய சொல்லிக் கொடுப்பார். நான் தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்தது பற்றி பாராட்டி பேசி இருக்கின்றார். அவர் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கின்றார். வாரிசு திரைப்படத்தில் நடித்தது ஒரு குடும்பத்தில் வாழ்ந்தது போல் இருந்தது. 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என தெரிவித்திருக்கின்றார். இந்த படம் வருகின்ற 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது