தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீப காலமாகவே மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நடிகை சமந்தா அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் நடந்து வரும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் நடிகை சமந்தா கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு வெள்ளை நிற உடைய கெத்தாக நடந்து வருகிறார். மேலும் இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.