அவதார் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை இயக்குனர் தெரிவித்துள்ளார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி இருக்கின்றது.

மேலும் இப்படம் பல ஆயிரம் கோடி வசூல் சாதனையும் படைத்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் குறித்து ஜேம்ஸ் கேமரூன் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அவதார் வே ஆப் வாட்டர் லாபகரமானது எனவும் மூன்று தொடர்ச்சிகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதிலிருந்து என்னால் வெளியேற முடியாது. மேலும் அடுத்த ஆறு அல்லது ஏழு வருடங்களில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு தெரியும் என தெரிவித்திருக்கின்றார். ஜேம்ஸ் கேமரூன் அவதார் திரைப்படத்தின் 5 பாகங்களை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றார். அவற்றில் இரண்டை முழுமையாக படமாக்கி இருக்கின்றார். மேலும் அவதார் 3 அவதார் 4 திரைப்படத்தின் சில பகுதிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றது. அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் தலைப்பு தி சீட் பேரர் என சொல்லப்படுகின்றது. 68 வயதான இயக்குனர் தனது வாழ்நாள் முழுவதும் அவதார் திரைப்படங்களை மட்டுமே இயக்குவார் எனக் கூறினாலும் அது மிகை ஆகாது.