காந்தாரா திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது.

கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.

இந்த நிலையில் காந்தாரா திரைப்படம் 100 நாட்களை எட்டி இருக்கின்றது. இது பற்றி இயக்குனர் ரிஷப் செட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம் நமது வேர்களை திரும்பிப் பார்க்க வைத்து கலாச்சாரத்தின் மீது பிரம்மிப்பை ஏற்படுத்தும். இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.