செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஒரு அமைச்சரை விசாரிக்க ஒரு அதிகாரி வராங்க. எங்களை எல்லாம் கூட விசாரிச்சு இருக்காங்க. நாங்க எல்லாம் கூட முறையா பதில் சொல்லி இருக்கிறோம். இதெல்லாம் நடந்திருக்கு எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். இதெல்லாம் 1996லிருந்து நடக்குது எங்களை பொறுத்த வரைக்கும்…. அப்போ வந்து திமுகவும் – காங்கிரஸும் கூட்டணியா இருந்தாங்க. அந்த சமயத்துல இங்க திமுக அரசாங்கம் இருந்தது. அந்த சமயத்துல எங்களை எல்லாம் விசாரிக்க வந்தப்போ நாங்க எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தோம். ஒத்துழைப்பு கொடுத்தது மட்டுமல்லாமல்….

இரவு ஒரு 11:30;

இதே அமலாக்கத்துறை  காங்கிரஸ் அரசு இருந்தபோது நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சர்,  நிதி அமைச்சராக இருந்தார். பா. சிதம்பரம் அவர்கள்  இருந்த போது தான், என்னை அமலாக்கத்துறை அழைச்சிட்டு போனாங்க. காலையில 11 மணிக்கு போனேன்,  இரவு ஒரு 11:30 மணி வரைக்கும் என்னை அரெஸ்ட் பண்ண போறாங்கன்னு எனக்கே தெரியாது. பேசிட்டு இருந்தாங்க. நான் சாப்பாடு கேட்கவும் இல்ல, அவுங்க கொடுக்கவும் இல்ல.

அரெஸ்ட்:

நைட் 11:30 மணிக்கு உங்களை  அரெஸ்ட் பண்ணி இருக்கிறோம் என சொல்லி,  நீதிபதி வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும்னு சொன்னாங்க.  சரி வாங்க அப்படின்னு சொல்லிட்டு நானும் போனேன். நான் போகும்போது என் உறவினர்கள் யாரையுமே பார்க்க முடியல. என் கணவர்,  அவருடைய சகோதரர்கள் , அவர்களுடைய பையன்கள், என்னுடைய அண்ணன், அண்ணன் பையன் எல்லாரும் காலைல என்னை  அழைச்சிட்டு போயிருக்காங்கன்னு சொல்லும் போது…

C.M கருணாநிதி:

ரெண்டாவது மாடியோ,  மூன்றாவது மடியோ தெரியல. அங்க விசாரணை நடந்துச்சு. இவங்க எல்லாம் கிரவுண்ட் ப்ளோர்ல லாங்ல தான் நின்னுட்டு இருந்து இருக்காங்க. யாரும் எதுவும் செய்யல, சும்மா நின்னுட்டு இருக்காங்க. அவங்க எல்லாரையும் இதே திமுக அரசு… திரு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது என்ன பண்றாங்க ?   எல்லா உறவினரையும் பார்த்து….  பெண்களை கூப்பிடல…. ஆண்களெல்லாம் கூப்பிட்டு,  ஜீப்ல உட்காருங்கன்னு சொல்றாங்க.

அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்;

இவங்களுக்கு எதுக்குன்னு தெரியல. உக்காந்ததும் ஒரு எட்டு மணி போல கொண்டு போயி அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சிருக்காங்க. மதியம் ஒரு மூணு மணியிலிருந்து உக்கார வச்சு இருக்காங்க.  ஈவினிங் எங்கே போறோம் என்று அவங்களுக்கும் தெரியல.நேரா வேலூர் ஜெயிலில் கொண்டு போய் வச்சுட்டாங்க. கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு மாதத்திற்கு மேல் இருந்து தான் வீட்டுக்கு போயிருக்காங்க. அப்ப எல்லாம் நாங்க எல்லாம் எதுவும் சொல்லலையே.

போலீசை அடிக்கிறாங்க:

நாங்க எல்லாம் பெருசு படுத்தவே இல்லை. சரி ஏதோ செய்கிறார்கள்ன் என்று…. அதே கருணாநிதி வழிவந்த திமுக அரசு,  இன்னைக்கு என்ன பண்ணுது ? அவுங்க மந்திரியை கூப்பிட்டு விசாரிக்கும் போது,  பெண் அதிகாரிகளை போயி அடிக்கிறாங்க… அதெல்லாம் செய்யலாமா ?   எதுக்காக நம்ம தமிழ்நாட்டில் இவ்வளவு போலீஸ் ஸ்டேஷன்  வச்சிருக்கோம் ? இப்போ போலீஸ் ஸ்டேஷனில் உங்களையே ஒரு விசாரணை என்று கூப்பிடுறாங்க….

இது ரொம்ப தவறு:

நீங்க உடனே வீட்ல உள்ள சாமான் எல்லாம் எடுத்து போட்டு போலீஸ்காரங்களை போய் அடிப்பீங்களா ? அடிக்க முடியாது இல்ல. அப்புறம் தமிழக அரசுக்கு ஒரு நியாயம் ? மத்திய அரசிலிருந்து வரக்கூடிய அதிகாரிகள் என்றால் வேற நியாயமா ? தவறு இல்லையா ? அது. ஒரு அமைச்சராக இருக்குறவுங்களே இந்த வழிகாட்டு முறையை செஞ்சு காமிச்சாங்கன்னா…?  மத்தவுங்களை எப்படி நீங்க கண்ட்ரோல் பண்ண முடியும்? இதுல ஒத்துழைப்பு கொடுத்து போய் இருக்கணும், அது தான் முறை. இதை செய்யல என தெரிவித்தார்.