திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிந்து சமவெளி நாகரிகம், நம்முடைய நாகரீகம், திராவிட நாகரிகம், தமிழர்  நாகரிகம் என்று வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இந்த கும்பல் சங்பரிவார் கும்பல்… அதை ஆரிய நாகரீகம் என்று சொல்லுகிறார்கள். பார்ப்பன நாகரிகம் என்று சொல்லுகிறார்கள். அங்கு ஓடிய நதி சிந்து நதி என்று வல்லுவர்கள் சொல்லுகிறார்கள்.

நிர்மலா சீதாராமன் பேரவையிலே படிக்கின்றார் சரஸ்வதி ஆறு அங்கே ஓடியது என்று பேசுகிறார். வரலாற்றை திரிகிறார்கள்.. வரலாற்றை திரிப்பது ”இந்துத்துவா” அரசியல்… வரலாற்றை திரிப்பது இந்துத்துவா அரசியல்.. தோழர்களே..!  முஸ்லிம்களுக்கு தனி அரசமைப்புச் சட்டம் இருக்கிறதா ? பொதுவான சட்டம் தான் அரசமைப்பு சட்டம். இந்துக்களுக்கு தனி அரசமைப்புச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு தனி அரசியலமைப்பு சட்டம்,  கிருத்தவர்களுக்கு  தனி அரசியலமைப்பு சட்டம் உண்டா..?  கான்ஸ்டிடியூஷன் for ஆல். அது காமன் கோடு தான். அது பொதுவான சட்டம் தான்.

Indian Penal Code அனைவருக்கும் பொதுவானது தான், IPC என்பது இந்துக்களுக்கு வேறு, முஸ்லிம்களுக்கு வேற கிடையாது. Criminal Procedures Code அது பொதுவானது தான். இந்துக்களுக்கு வேறு, முஸ்லிம்களுக்கு வேறு, கிருத்தவர்களுக்கு வேற கிடையாது. Property Act; சொத்துக்கள் தொடர்பான சட்டம் இந்துக்களுக்கும் ஒன்றுதான், இஸ்லாமியர்களுக்கும் ஒன்றுதான்.  மற்றவர்களுக்கும் ஒன்றுதான்.

Industrial Disputes Act: தொழில் தகராறு சட்டம், அது எல்லா மதத்திற்கும் பொதுவானது தான். எல்லா சட்டங்களும் பொதுவாக தான் இருக்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் Personal Law  இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தனி சட்டம் இருப்பதை போல இந்துக்களும்

The Hindu Marriage Act இருக்கிறது. இந்துக்களும் The Hindu Succession Act  இருக்கிறது. தனிச்சட்டம் தான் அதுவும் பர்சனல் லா தான். இந்துக்களுக்கு தனிச்சட்டம் இருப்பது போல, முஸ்லிம்களுக்கு தனி சட்டம் இருக்கிறது.. Muslim Personal Law (Shariat)  முஸ்லிம்களுக்கு தனி சட்டம் இருப்பதை போல  கிறிஸ்தவர்களுக்கு The Indian Christian Marriage Act இருக்கிறது.

திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுத்தல் இது போன்ற கலாச்சாரம் தொடர்பான சமூக உறவுகள் தொடர்பான சட்டங்கள் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியாக இருக்கின்றன . ஆனால் அவர்கள் இதை மட்டுமே சொல்லி முஸ்லிம்களுக்கு Shariat சட்டம்.. ஏன் ? அவர்களுக்கு ஏன் தலாக் ? முத்தலாக் என்று இருக்கிறது. ஒரு இந்துவாக இருக்கிறவன் உடனே டைவர்ஸ் வாங்க முடியவில்லை. ஒரு முஸ்லிமாக இருப்பவன் உடனே முத்தலாக் என்று சொல்லி விவாகரத்து பண்ணி விடுகிறான் என இந்துத்துவா_வினர் சொல்வார்கள் என தெரிவித்தார்.