திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அயோத்தியில் ராமர் கோவில் உலக அதிசயம் ஒன்று என்கிற வகையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது இந்த நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னால் கிளைமேக்ஸ்… அதைத்தான் திறந்து வைக்கப் போகிறார்கள்..

அவர்கள் நினைத்தபடியே ஜம்மு காஷ்மீரை உடைத்து துண்டாகி விட்டார்கள், அது மிகப்பெரிய துரோகம். ஒப்புதலோடு தான் அவர்கள் நம்மோடு இணைந்தார்கள் . 37 ஆர்டிகல் என்பது பற்றி…  உடன்பட்டுதான் ஜவஹர்லால் நேரு அன்றைக்கு இருந்த அந்த அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி,  உடன்பட்ட அடிப்படையில் தான் பாகிஸ்தானோடு சேராமல் இந்தியாவோடு சேர்ந்ததார்கள். ஆனால் அதையும் இன்றைக்கு உடைத்து விட்டார்கள்.இரண்டு காரியத்தை நிறைவேற்றி விட்டார்கள்.

மூன்றவது யூனிபார்ம் சிவில் கோட்:

இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப் போவதாக தெரிகிறது. இதற்கு அம்பேத்கரை துணைக்கு இழுக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களே..  காமன் சிவில் கோர்ட் வேண்டும் என்று சொன்னார். நீங்கள் சொல்லுகிற அர்த்தத்தில் பேசுகின்றார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லவில்லை. முஸ்லிம்களுக்கு தனி சட்டம் கூடாது, கிறிஸ்தவர்களுக்கு தனிச்சட்டம் கூடாது என்கிற பொருளில் அம்பேத்கர் யூனிபார்ம் சிவில் கோடு கொண்டு வரவில்லை.

அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது,  கோட் ஆப் ஹிந்து பில் என்கிற ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தார். அந்த கோட் ஆப் ஹிந்து பில் என்பது யூனிபார்ம் சிவில் கோடுதான்.  என்னவென்றால் ? இந்து மதத்திலே பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாக…  அவர்களுக்கு அடுத்து சத்திரியர்கள்…  அவர்களுக்கு அடுத்து வைசியர்கள்… 

அவர்களுக்கு அடுத்து சூத்திரர்கள்…  இந்த நான்கு  பிரிவுக்கும் அப்பாற்பட்ட”சாதி  அற்றவர்”-களாக இருக்கிற தலித்துகள் இவர்கள் அனைவரும் சமமாக இல்லை, அதைவிட முக்கியமாக ஆண்களும் – பெண்களும் இந்துச் சமூகத்தில் சமமாக இல்லை.

ஆண்களுக்கும் – பெண்களுக்கும் திருமண உறவு, விவாகரத்து உரிமை, சொத்துரிமை என்று பார்க்கிறபோது பெண்களுக்கு ஜீரோ .. பெண்கள் விவாகரத்து உரிமையை அவர்கள் எளிதாக பெற முடியாது. பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. பெண்களுக்கு வாரிசுரிமை பெரிய அளவிலே பாதுகாப்பானதாக இல்லை. எனக்கு குழந்தை இல்ல, திருமணமாகி 20 வருஷம் ஆச்சு.. ஆனால் ஒரு குழந்தை வேணும் என அவர்கள்  தத்தெடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

அதற்கு என்ன காரணம் என்றால் ? ஹிந்துஸ் பர்சனல் லாஸ்…  இந்துக்களுக்கு என்று இருக்கிற தனிச்சட்டம் தான் காரணம். இந்து சமூகத்தில் நிலவுகின்ற இந்த பாகுபாடுகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்கிற அடிப்படையில் ? அவர் கொண்டு வந்த சட்டம்தான் கோட் ஆப் இந்து பில்…  அங்கதான் யூனிபார்ம் கொண்டு வந்தார்.

பார்ப்பனர்களாக இருந்தாலும்,  சக்கிலியர்களாக இருந்தாலும் திருமணம் முறை ஒன்றாக இருக்க வேண்டும். விவாகரத்து முறை ஒன்றாக இருக்க வேண்டும்,  ஆண்களுக்கும் சொத்துரிமை –  பெண்களுக்கும் சொத்துரிமை,  ஆண்களுக்கும் அதிகாரம் – பெண்களுக்கு அதிகாரம், ஜெண்டர் ஈகுவாலிட்டி என்கிற அடிப்படையில் புரட்சியாளர் அம்பேத்கர் யூனிபார்ம் சிவில் கோடு என்கிற கருத்தியலை ஒத்துக் கொண்டார், ஆதரித்தார்.

ஆனால் இவர்கள் அம்பேத்கரே சிவில் கோடு வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லுவதன் மூலம்…  இஸ்லாமியர்களுக்கு எதிராக அம்பேத்கர் சிந்தித்தார் – கிறிஸ்தவர்களுக்கு எதிராக அம்பேத்கர் சிந்தித்தார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இதுதான் திரிபு வாதம்..  திரித்து பேசுவது தான் அவர்களின் அரசியல் என தெரிவித்தார்.