தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசு என்னும் எழுத்தும்,நான் முதல்வர் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டிலேயே முதல்முறையாக காணொளி மூலமாக பாடங்களை கற்பிக்கும் மலர்கேணி என்ற செயலியை தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. கற்றல் மற்றும் கற்பித்தலை சுவாரசியமாக மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வல்லுனர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலை மூலமாக ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விளக்க பாடங்களை உருவாக்கி எளிய முறையில் கற்பிக்கலாம். மேலும் இந்த செயலி மாநில கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை 27 ஆயிரம் வகை பிரித்து விளக்க பாடங்களை உருவாக்கி வழங்குகிறது. இதன் மூலம் மாநில முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.