
செய்தியாளர்களிடம் பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், கவர்னரின் கடமை எது ? அரசினுடைய கடமை எது ? முதலமைச்சர் தான் அரசியல் நடத்துகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முதலமைச்சர் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை.
ஆளுநர் பதவி தேவையற்றது அடிக்கடி சொல்வார்கள். இவர்கள் பத்தாண்டு காலம் ஆட்சியில இருந்தார்கள் அல்லவா ? எத்தனை முறை ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முயன்று இருக்கின்றது. இன்றைக்கு சொல்கிறார்களே இந்த அமைச்சர்கள்…… அவர்களை பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது… இவர்கள் எல்லாம் எப்படி அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது….
சொல்லுகிறார்கள் கவர்ணருக்கு நாங்கள் கொடுக்கின்ற சம்பளம், நாங்கள் தருகின்ற பிச்சை என்கிறார்…. நீங்கள் வாங்குகின்ற சம்பளம் யார் தருகின்ற பிச்சை உங்களுக்கு ? எல்லாமே மக்கள் தருகின்ற வரிப்பணத்தில் இருந்து தான் தரப்படுகிறது. மக்கள் எஜமானர்கள். இதை தமிழக மந்திரிமார்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.