சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசங்கள் விபரீதத்தில் முடிவதைக் காட்டும் மற்றொரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்காணொளியில், இளைஞர் ஒருவர் தனது கைகளில் கிருமிநாசினி திரவத்தை ஊற்றிக்கொண்டு, அதன் மேல் லைட்டர் மூலம் தீப்பற்ற வைக்க முயற்சி செய்கிறார்.
अपने आप आपको कर्तबाज कहता था 😂
फिर इसकी ऐसी लंका लगी की लेने के देने पड़ गए 😭🥲 pic.twitter.com/mYp70MQFbp
— Palwi (@palwi_333) January 23, 2026
சானிடைசரில் அதிக அளவில் ஆல்கஹால் இருப்பதால், தீ வைத்த அடுத்த நொடியே அது இளைஞரின் கைகளில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது. சற்றும் எதிர்பாராத இந்த விபரீதத்தால் நிலைதடுமாறிய அந்த இளைஞர், வலியால் துடிப்பதையும் கைகளை உதறித் தீயை அணைக்கப் போராடுவதையும் காணொளியில் காண முடிகிறது.
லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளுக்காகத் தனது பாதுகாப்பை மறந்த இளைஞரின் இந்தச் செயல் முட்டாள்தனமானது என்றும், இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் இணையவாசிகள் எச்சரித்து வருகின்றனர்.
