2011-ம் ஆண்டு பீகாரின் தஜிபூர் கிராமத்தில் பிறந்த வைபவ், தனது 12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகி சச்சின், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தவர்.
2026 அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்த இன்னிங்ஸில் மட்டும் 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். இதன் மூலம் யூத் ஒருநாள் போட்டிகளில் 100 சிக்ஸர்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
11 வயதிலேயே இவரது திறமையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் டீம் கண்டறிந்தது. குறிப்பாக ஜாம்பவான் குமார் சங்ககரா இவர் மீது அதிக நம்பிக்கை வைத்தார். 13 வயதில் ₹1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
