தற்போது நடைபெற்று வரும் அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அபாரமான பேட்டிங்கால் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்து அதிவேக சதம் விளாசினார். வெறும் 14 வயதிலேயே உலகக் கோப்பை ஃபைனலில் சதம் அடித்த இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
வைபவின் பேட்டிங்கைப் பார்த்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச், “இவரது பேட்டிங் ஸ்டைல் அப்படியே ஜாம்பவான் பிரையன் லாரா (Brian Lara) போலவே இருக்கிறது. பந்தை அவர் எதிர்கொள்ளும் விதமும், லாவகமாக அடிக்கும் ஷாட்களும் பிரமிக்க வைக்கின்றன” என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
வைபவ் ஒரு இடதுகை பேட்டர் என்பதால், லாராவின் சாயல் அவரிடம் அதிகம் தெரிவதாக கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கையாக அவர் உருவெடுத்துள்ளார்.
