அண்டர்-19 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணியின் கை ஓங்கியிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வானவேடிக்கை காட்டினார். 175 ரன்கள் குவித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். இதன் மூலம் இந்தியா 50 ஓவர் முடிவில் 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் பால்கனர் (115) சதமடித்தும், பென் டாக்கின்ஸ் (66) அதிரடி காட்டியும் பலன் அளிக்கவில்லை. மற்ற வீரர்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 6-வது முறையாக உலகக் கோப்பையைத் தூக்கி வரலாறு படைத்தது.
